கோலாலம்பூர், டிசம்பர் 20 – இந்தியர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களால் நடத்தப்படும் அழகு ராணி போட்டிகளில் முறைகேடுகள் நடைபெறுவதாக பாதிக்கப்பட்ட நந்தினி உத்தமபுத்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
குமாரி பிரிவில் திருமதியை இணைத்து, அவரை வெற்றியாளராகத் தேர்வு செய்தது ஒரு பெரிய மோசடியாக இருப்பதாக நந்தினி கூறினார்.
அதுமட்டுமல்லாமல், அதிக டிக்கெட்டுகளை விற்பனை செய்பவர்களே முதல் மூன்று இடங்களில் அழகு ராணியாகத் தேர்வு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
pc – nanthini
அழகு ராணி போட்டிகளுக்கான விதிமுறைகளை முற்றிலும் மீறப்பட்டு போட்டிகள் நடத்தப்படுவதாக நந்தினி விமர்சித்தார்.
இதற்கு ஆதாரமாக போட்டி ஏற்பாட்டாளரின் வீடியோ பதிவுகளை நேற்று கோலாலம்பூரில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் வெளியிட்டார்.
போட்டி தொடர்பாக
போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாவும், இது தொடர்பான ஆவணங்களையும் போலீசிடம் ஒப்படைத்துள்ளதாகவும் நந்தினி கூறினார்.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பான மகஜர் ஒன்றும் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் சமர்ப்பிக்கப்படும் என உரிமை கட்சியின் சிலாங்கூர் மற்றும் கூட்டரசுப் பிரதேச ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் தெரிவித்தார்.
Pc- gunasegaran
Closing
அழகு ராணி போட்டிகளின் தரம் மற்றும் மதிப்பைப் பாதுகாக்க வேண்டும்; பொருளாதார அடிப்படையில் நடத்தப்படும் போட்டிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நந்தினி வலியுறுத்தினார்.