வாஷிங்டன், டிசம்பர்-23 – அமெரிக்க அதிபர் தேர்தலில் டோனல்ட் டிரம்ப்பை வெற்றிப் பெற வைத்ததில் பெரும் பங்கு வகித்த உலக மகா கோடீஸ்வரர் இலோன் மாஸ்க், டிரம்புக்கு ஈடாக அடிக்கடி அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அவ்வரிசையில், அடுத்து அவர் குறி வைத்திருப்பது கூகுள் நிறுவனத்தின் Gmail ஆகும்.
Gmail-லுக்குப் போட்டியாக Xmail மின்னஞ்சல் சேவையைத் தொடங்க அவர் திட்டமிட்டுள்ளார்.
Xmail மின்னஞ்சல் சேவை உருவானால் சிறப்பாக இருக்குமே என X தளத்தில் முன்வைக்கப்பட்ட ஒரு பரிந்துரைக்குப் பதிலளிக்கையில், “ஆமாம் இதுவும் எங்களது திட்டங்களில் ஒன்று” என குறிப்பிட்டு மாஸ்க் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இவ்வாண்டு செப்டம்பர் வரையில் உலக மின்னஞ்சல் சந்தையில் Apple Mail 53.67 விழுக்காட்டுடன் ஆதிக்கம் செலுத்துகிறது.
Gmail 30.70 விழுக்காட்டுடன் இரண்டாமிடத்திலும், Outlook 4.38 விழுக்காட்டுடன் மூன்றாமிடத்திலும் உள்ளன.
அடுத்தடுத்த இடங்களில் Yahoo! Mail மற்றும் Google Android உள்ளன.
உலகளவில் 1.8 பில்லியனுக்கும்அதிகமான Gmail கணக்குகளை வைத்திருக்கும் கூகுள் நிறுவனத்திற்கு போட்டியாக Xmail-லை வைத்து இலோன் மாஸ்க் வெற்றிப் பெற முடியுமா என்ற கேள்வி எழுவே செய்கிறது.
ஆனால், எவ்வளவு பெரிய சவாலையும் சமாளிக்கக் கூடியவர் என அறியப்படும் அவர், இந்த விஷயத்திலும் ஒரு கைப் பார்க்காமல் விட மாட்டார் என்றே கூறப்படுகிறது.
ஒருவேளை, Xmail உருவாக்கம் சாத்தியமானால், கூகுள் CEO சுந்தர் பிச்சையின் Gmail-லுக்கு முதன் முறையாக போட்டி உருவாகுமெனது குறிப்பிடத்தக்கது.