தைப்பிங், டிசம்பர்-27 – பேராக், தைப்பிங்கில் மாதக்கணக்கில் தவணைப் பணம் செலுத்தாததால் மோட்டார் சைக்கிளை இழுத்துச் செல்ல வந்த பணியாளர்களுக்கு, அதன் உரிமையாளர் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் இழுத்துச் செல்லப்படுவதால் சினமடைந்த 40 வயது அம்மாது, கண்ணிமைக்கும் நேரத்தில் பெட்ரோலை ஊற்றி அதற்குத் தீ வைத்து விட்டார்.
நேற்று பிற்பகலில் பொக்கோக் அசாம், ஜாலான் மஸ்ஜித்தில் நிகழ்ந்த அச்சம்பவத்தால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தீ வைக்கப்பட்டதில் அந்த Honda RSX மோட்டார் சைக்கிள் 80 விழுக்காடு அழிந்துபோனது.
தைப்பிங் தீயணைப்பு-மீட்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர்.
சம்பந்தப்பட்ட அப்பெண் நெருப்புடன் சதிநாச வேலையில் ஈடுபட்டதன் பேரில் விசாரணைக்காகக் கைதாகியுள்ளார்.