Latestஅமெரிக்காஉலகம்சிங்கப்பூர்
கலிபோர்னியாவில் சிறு ரக விமானம் கட்டிடத்தில் மோதியது; இருவர் மரணம் 18 பேர் காயம்
லாஸ் ஏஞ்சல்ஸ் , ஜன 3 – கலிபோர்னியாவில் சிறு ரக விமானம் ஒன்று வர்த்தக கட்டிடத்தில் மோதியதில் இருவர் உயிரிழந்ததோடு 18 பேர் காயம் அடைந்தனர்.
லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து தென்கிழக்கே 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஃபுல்லெர்டன் ( Fullerton Municipal ) விமான நிலையத்திற்கு அருகே பிற்பகலில் நிகழ்ந்த இந்த விபத்திற்கான காரணம் தெரியவில்லை.
மேலும், 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் இதர எண்மருக்கு விபத்து நிகழ்ந்த இடத்திலேயே சிகிச்சை வழங்கப்பட்டது.
இறந்தவர்கள் விமான பயணிகளா அல்லது விபத்துக்குள்ளான இடத்தில் கட்டிடப் பகுதியில் இருந்த தொழிலாளர்களா என்று தெரியவில்லை. விமானம் மோதிய கட்டிடத்தின் மேற்கூரையில் ஒரு துளையிலிருந்து புகை வெளியேறுவதை தொலைக்காட்சி படங்களில் காணமுடிந்தது.