
துபாய், ஜனவரி-8 – ஐக்கிய அரபு சிற்றரசின் துபாயில் நடைபெற்ற கார் பந்தயப் பயிற்சியின் போது நடிகர் அஜீத் குமார் விபத்துக்குள்ளானார்.
நல்லவேளையாக காயங்கள் இன்றி அவர் உயிர் தப்பினார்.
மருத்துவக் குழு அவரை முழுமையாகப் பரிசோதனை செய்ததில் கவலைப்பட ஒன்றுமில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அஜீத் மீண்டும் பயிற்சியில் ஈடுபடுவார் என அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்தார்.
விபத்தின் போது பந்தயக் கார் சுற்றி சுற்றி நிற்கும் பதைபதைக்க வைக்க வைக்கும் காட்சிகள் முன்னதாக இணையத்தில் வைரலாகின.
தங்களின் அபிமான நடிகருக்கு என்னானதோ என இரசிகர்கள் கவலையடைந்த நிலையில், அஜீத் நலமுடன் இருப்பதாக சக பந்தய வீரர் ஃபாயியன் புகைப்படத்தைப் பகிர்ந்ததைப் பார்த்தப் பிறகே அவர்கள் நிம்மதியடைந்தனர்.
சனிக்கிழமை நடைபெறும் Dubai 24 Hour Race கார் பந்தயத்தில் பங்கேற்கும் பொருட்டு அஜீத் தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளார்.