![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2025/01/pdrm-police-logo-21102020_1845260_20210817222425.jpg)
சண்டகான் , ஜன 9 – ஒப்பனை கருவிகள் வாங்குவதற்காக கைதொலைபேசிகளை அடகு வைத்ததால் தங்களது கணவர்கள் திட்டுவார்கள் என்று கவலைப்பட்ட இரண்டு பெண்கள், அவை திருடப்பட்டதாக பொய்யான புகார் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
20 மற்றும் 34 வயதுடைய இல்லத்தரசிகளான அந்த இரண்டு பெண்களையும் , நேற்று இரவு 7 மணியளவில் ஆயுதம் ஏந்திய மூவர் கொள்ளையடித்தாகவும் அவர்களோடு தங்களது 2 நண்பர்களும் கொள்ளையடிக்கப்பட்டதாக சண்டகான் (Sandakan ) மாவட்ட போலீஸ்துறைத் தலைவர் உதவி ஆணையர் அப்துல் புவாட் அப்துல் மாலேக் (Abdul Fuad Abdul Malek) புகார் பெற்றுள்ளார்.
இரண்டு பெண்களும் தங்களுடைய இரண்டு கை தொலைபேசிகள், 136 ரிங்கிட் ரொக்கம் ஆகியவற்றை ஆயுதம் ஏந்திய மூன்று சந்தேக நபர்கள் கொள்ளையிட்டு சென்றதாக கூறியுள்ளனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், இரு பெண்களும் அளித்த சாட்சியம் முரண்பாடானதாகவும் சந்தேகத்திற்குரியதாகவும் இருந்தது தெரியவந்தது.
மேலும் விசாரணையில்,கொள்ளை நடக்கவில்லை என்பதை கண்டறிந்ததைத் தொடர்ந்து அந்த இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்து தவறான தகவல் கொடுத்ததற்காக குற்றவியல் சட்டம் பிரிவு 182 இன் கீழ் விசாரணை நடத்தி வருகின்றனர்.