கோலாலம்பூர், ஜன 10 – பிரபல பின்னணிப் பாடகர் பி. ஜெயச்சந்திரன் உடல் நலக் குறைவினால் நேற்றிரவு கேராவின் திருச்சூரில் காலமானார். புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த 80 வயதுடைய ஜெயச்சந்திரன் சிகிச்சை பலனின்றி இறந்தார். தமிழ், மலையாளம் , கன்னடம், இந்தி உட்பட 15,000 த்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் 1997ஆம் ஆண்டு தமிழக அரசிய கலைமாமணி விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
இசைஞானி இளையராஜா , இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் போன்ற பிரபலமான இசையமைப்பாளர்களின் இசையில் ஜெயச்சந்திரன் பல புகழ்பெற்ற பாடல்களை பாடியுள்ளார். வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு மற்றும் காத்திருந்து காத்திருந்து பாடல்கள் உள்ளூர் இசைத்துறையில் அவரது பெயரைச் செதுக்கி, அந்த படைப்புகளை இன்றும் நினைவில் வைத்திருக்கும் உன்னதமானவை. கன்னத்தில் முத்தமிட்டல் திரையில் இடம்பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடலும், கேட்போரை மெய்சிலிர்க்க வைத்தது பாடலாகும்.