Latestமலேசியா

மூவாரில் பாராங் கத்தியேந்திக் கொள்ளையிட்டதை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்ட ஆடவர்கள்

மூவார், ஜனவரி-10, ஜோகூர், மூவார், Taman Sri Treh-வில் உள்ள வீட்டொன்றில் ஆயுதமேந்திக் கொள்ளையிட்டு வைரலான இரு ஆடவர்கள், இன்று நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டனர்.

டிசம்பர் 17-ஆம் தேதி பாராங் கத்தி மற்றும் ஆட்டு நகம் வடிவிலான ஆயுதங்களை ஏந்தி கொள்ளையிட்டதாக செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர்கள் குற்றம் சாட்டப்பட்டனர்.

35 வயது Ku Kim Cheong, 35 வயது Chu Ching Hwai இருவரும் தங்கள் மீதான 3 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து அவர்களுக்கு 20 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் பிரம்படிகள் விதிக்கப்பட வாய்ப்புண்டு.

அதே நீதிமன்றத்தில் இருவர் மீதும் அபாயகர போதைப் பொருள் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.

அதையும் ஒப்புக்கொண்டதால், ஆளுக்கு 5 ஆண்டுகள் சிறையும் 1 பிரம்படியும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இவ்வேளையில், கொள்ளையிட்ட வீட்டின் உரிமையாளரைக் காயப்படுத்தியதாக மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர்கள் மூன்றாவது குற்றச்சாட்டை எதிர்நோக்கினர்.

அதனையும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்; எனினும் தண்டனை விவரங்கள் ஜனவரி 24-ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!