
சுங்கை பட்டாணி , ஜன 13 – 83 வயது ஓட்டுனர் தவறுதலாக ஹெக்சிலேட்டரை அழுத்தியதால் அவரது புரோடுவா மைவி கார் கடையில் மோதியதில் பெட்ரோல்
நிலையத்திற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதியது. சுங்கைப் பட்டாணி ஜாலான் Cindai Jaya வில் Family Mart கடையில் நிகழ்ந்த இந்த சம்பவம் அங்கிருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான 21 வினாடி காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
புரோடுவா மைவிகாரின் ஓட்டுனர் பெட்ரோல் நிரப்பியபின் காரின் பிரேக்கிற்கு பதில் ஹெக்சிலேட்டரை அழுத்தியதால் அக்காரின் பின்னால் 31 வயது ஆடவர் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மோதியதாக கோலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் வான் அஸாருடின் வான் இஸ்மாயில் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து காரும் மோட்டார்சைக்கிளும் அங்கிருந்த கடையின் காண்ணாடி சுவரில் மோதியதாக வான் அஸாருடின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். இதனால் அந்த காரும் கடையின் கண்ணாடி சுவரும் சேதம் அடைந்தன. . இச்சம்பவத்தில் எவரும் காயம் அடையவில்லை.