Latestமலேசியா

மலேசிய இந்தியர் வேளான் உருமாற்றுத் திட்டம் (MITAP) 2024/2025; இன்று முதல் பிப்ரவரி 13 வரை விண்ணப்பிக்கலாம்

செர்டாங், ஜனவரி 13 – இந்தியச் சமூகத்தை வேளாண்மைத்துறையிலும் முன்னேற்றும் நோக்குடன் 3.8 மில்லியன் நிதி ஒதுக்கீட்டுடன் உருவாக்கம் கண்டுள்ளது மலேசிய இந்தியர் வேளான் உருமாற்றுத் திட்டமான MITAP.

மித்ரா இயக்கும் இத்திட்டம், மலேசிய இந்திய வேளாண்மைத் தொழில்முனைவர்களுக்கு விவசாயம் சார்ந்த பொது அறிவு, திறன் மற்றும் நிதி உதவிகளை வழங்குவதுடன், விவசாயத் துறையில் ஈடுபடுவதற்கான சரியான சூழலை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

MARDI Corporation Sdn. Bhd-உடன் இணைந்து செயல்படுத்தப்படுகின்ற இத்திட்டம், இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

முதலவதாக, வணிக அளவு, விற்பனை மற்றும் வணிக நிலைத்தன்மைக்கான மேலாண்மை அம்சங்களை மேம்படுத்த உதவும் விவசாய மேம்பாட்டு வளர்ச்சி நிதி திட்டம்.

100 பேர் இத்திட்டம் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு, 2 நாட்களுக்கு Business Model Canvas Seminar எனும் கருத்தரங்கில் பங்கேற்பர்.

இதில் 70 பேர் 5 நாள் வேளான் தொழில்நுட்ப பயிற்சியுடன், 30,000 ரிங்கிட் வரையிலான நிதி உதவியுடன் தேர்வாகுவர் என மித்ராவின் சிறப்புப் பணிக் குழு தலைவர் பி.பிரபாகரன் தெரிவித்தார்.

இதனிடையே, தற்கால விவசாய தொழில்நுட்பத்தின் அறிவு மற்றும் மலேசிய திறன் சான்றிதழுடன் இளம் இந்திய விவசாயிகளை உருவாக்கும் இளையோர் வேளாண் தொழில்முனைவர் திட்டம், இத்திட்டத்தின் இரண்டாம் பிரிவாகும் என்றார், அவர்.

10 மாதங்கள் நடத்தப்படவிருக்கின்ற கற்பித்தலை தொடர்ந்து, சிலாங்கூர் மற்றும் ஜோகூர் மாநிலங்களில் 6 மாதக் காலத்திற்கு 1 ஏக்கர் நிலம் விவசாயத்திற்காக வழங்கப்படும் என்றார், பிரபாகரன்.

மித்ராவின் கீழ் செயல்படும் 2024/2025ஆம் ஆண்டிற்கான மலேசிய இந்தியர் வேளான் உருமாற்றுத் திட்டமான MITAP-ற்கான விண்ணப்பங்கள் இன்று ஜனவரி 13ஆம் திகதி முதல் பிப்ரவரி 13 வரை கூகள் படிவம் மூலம் சமர்ப்பிக்கலாம் என பி. பிரபாகரன் அறிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!