
பட்டவொர்த், ஜனவரி-20 – பினாங்கு, பட்டவொர்த், Japan Chain Ferry-யில் எதிர் திசையில் வாகனமோட்டி, 4 வாகனங்கள் மோதிக் கொள்ள காரணமாக இருந்த காரோட்டி கைதாகியுள்ளார்.
28 வயது சந்தேக நபர் சனிக்கிழமை மாலை கைதானதாக, செபராங் பிறை உத்தாரா போலீஸ் தலைவர் Anuar Abdul Rahman தெரிவித்தார்.
அவ்வாடவர் ஓட்டிய Mitsubishi Lancer திடீரென சாலையின் எதிர் திசையில் புகுந்ததால், ஒரு 4 சக்கர வாகனம் மற்றும் 3 கார்களை அது மோதியது.
இதனால் இரு ஓட்டுநர்கள் காயமடைந்து, அவர்களில் ஒருவர் இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
சந்தேக நபரை விசாரணைக்காகத் தடுத்து வைக்க கைது ஆணைப் பெறப்படுமென Anuar தெரிவித்தார்.
சம்பவக் காணொலி முன்னதாக சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.