லாஹாட் டத்து, ஜனவரி-20 – சபா, லாஹாட் டத்துவில் கத்தி முனையில் மளிகைக் கடையைக் கொள்ளையிட்ட ஆடவனை போலீஸ் தேடி வருகிறது.
பத்து தூஜோ, சிம்பாங் பாயாங்கில் சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், 1,220 ரிங்கிட் நட்டமேற்பட்டது.
சம்பவத்தின் போது, தலையில் ஹெல்மட் அணிந்திருந்த அவ்வாடவன் பொருட்களை வாங்குவது போல் கடையில் நுழைந்துள்ளான்.
எனினும், திடீரென கல்லாப்பெட்டியில் இருந்த பெண் பணியாளரின் கழுத்தில் கத்தியை வைத்து, அதிலிருந்த ரொக்கப் பணத்துடன் அவன் கம்பி நீட்டினான்.
கறுப்பு சிவப்பு நிறங்களிலான EX5 மோட்டார் சைக்கிளில் அவன் தப்பியோடினான்.
தகவல் தெரிந்த பொது மக்கள் போலீஸை தொடர்புகொண்டு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.