Latestமலேசியா

MIED Care உபகாரச் சம்பள நேர்முகத் தேர்வு: எதிர்காலத்திற்கு அடித்தளமிடும் வாய்ப்பு

கெடா, ஜனவரி 20 – சுடர் விளக்காயினும் தூண்டுகோள் வேண்டும் என்பார்கள். அவ்வகையில் நம் சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்றாலும் அவர்கள் தொடர்ந்து பட்டப்படிப்பை தாங்கள் விரும்பிய துறையில் மேற்கொள்ள அதற்கான வாய்ப்பு, நிதியுதவி போன்றவை அவசியம்.

அதனை வழங்கும் உன்னத நோக்கில்தான் MIED ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகதில் படிப்பதற்கான மேற்கல்வி வாய்ப்புகள் மற்றும் உபகராச்சம்பளம் என வருடா வருடம் ஏற்படுத்தி தருகிறது.

கல்விதான் நம் சமூகத்தை முன்னேற்றுவதற்கான பிரதான வழி என்பதை முன்னிறுத்தி சீரிய நோக்குடன் செயல்படும் ம.இ.கா தேசியத் தலைவரும் பல்கலைக்கழக வேந்தருமான டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில், தற்போது MIED Care உபகாரச் சம்பளத்தை மேலும் அதிகமான மாணவர்கள் பெற்று பயனடைந்து வருகின்றனர்.

அவ்வகையில், இந்த வருடமும் அதற்காக மேற்கொள்ளப்பட்ட நேர்முகத் தேர்வில் மருத்துவம், பல்மருத்துவம், மருந்தகம், வர்த்தகம் என 19 பட்டப்படிப்புகளுக்கான 722 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த உபகாரச் சம்பளம் கிடைத்தால் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் நிதிச் சுமையை குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட பெற்றோர்களின் நிதிச் சுமையை குறைக்க முடியும் என்று நேர்முக தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் தெரிவித்தனர்.
Interview

Closing
சிறப்பான தேர்ச்சிகளுடன் பொதுப் பல்கலைக்கழகங்கில் வாய்ப்புகளைத் தவறவிட்ட மாணவர்களுக்கு அவர்களின் விருப்பத்துறைகளில் கல்வி தொடரும் வழியையும், குறைந்த வருமானக் குடும்பங்களின் பொருளாதார சுமையைக் குறைக்கும் உதவியையும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் தொடர்ந்து வழங்குகிறது.

எந்த பாகுபாடும் இன்றி தகுதியுடைய அனைத்து மாணவர்களுக்கும் தரமான உயர் கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கில் வழங்கப்படும் இந்த வாய்ப்பு வரும் காலங்களில் இன்னும் அதிகமான இந்திய மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்பதே எங்களின் விருப்பமும் எதிர்ப்பார்ப்பும் என்றார் டான் ஶ்ரீ விக்னேஸ்வரன்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!