பிறப்பால் குடியுரிமை வழங்குவதைக் கட்டுப்படுத்தும் டிரம்பின் உத்தரவுக்கு அமெரிக்க நீதிபதி இடைக்கால தடை உத்தரவு

வாஷிங்டன், ஜனவரி-24, பிறப்பால் அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்படுவதற்குத் தடை விதித்து அதிபர் டோனல்ட் டிரம்ப் வெளியிட்ட உத்தரவுக்கு, கூட்டரசு நீதிபதி ஒருவர் இடைக்காலத் தடை விதித்துள்ளார்.
அது அப்பட்டமான அரசியலமைப்புச் சட்ட மீறல் என, நீதிபதி John Coughenour கண்டித்தார்.
டிரம்ப் நிர்வாகம் சர்ச்சைக்குரிய அந்த உத்தரவைச் செயல்படுத்துவதைத் தடுக்கும் விதமாக, 4 மாநில அரசுகள் செய்திருந்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டு நீதிபதி அம்முடிவை அறிவித்தார்.
வாஷிங்டன், அரிசோனா, இலினோய், ஓரேகோன் ஆகிய அந்த 4 மாநிலங்களும் ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளவையாகும்.
அதிபருக்கு உச்ச அதிகாரங்கள் இருந்தாலும், எல்லாவற்றிலும் தன்னிச்சையாக முடிவெடுக்க அவர் ஒன்னனும் அரசர் அல்ல;
நாடாளுமன்றத்தில் மூன்றில் 2 பங்கு பெரும்பான்மைப் அவர் பெற வேண்டுமென்பதை அந்நான்கு மாநில அரசுகளும் நீதிமன்றத்திடம் சுட்டிக் காட்டின.
இந்நிலையில் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து நிச்சயம் மேல் முறையீடு செய்வோம் என டிரம்ப் கூறியுள்ளார்.
திங்கட்கிழமை மீண்டும் அதிபராகப் போறுப்பேற்ற முதல் நாளிலேயே டிரம்ப் அதிரடியாகக் கையெழுத்திட்ட ஆவணங்களில் இந்த குடியுரிமையும் அடங்கும்.
அதன்படி, சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசிக்கும் பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இனி பிறப்பால் குடியுரிமை வழங்கப் படாது.
அதுபோல, தற்காலிகமாக, அதாவது வேலைக்காக அமெரிக்காவுக்கு வந்தவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் தானாகவே குடியுரிமை வழங்க முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.