![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2025/02/a9ae848832d4b5a04c4bee50f8c0a6f067a0427e49848.jpg)
கோலாலம்பூர், பிப் 3 – ஜாலான் உலு லங்காட் (Jalan Hulu Langat ) – அம்பாங்கில் இரு கார்கள் மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் 20 வயதுடைய இளைஞர் மரணம் அடைந்ததோடு மேலும் ஐவர் காயம் அடைந்தனர்.
நேற்று மாலை மணி 4.45 அளவில் நிகழ்ந்த அந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்ற இளைஞர் சாலை ஓரத்தில் விழுந்து இறந்த கிடந்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் நஸ்ரோன் அப்துல் யூசோப் ( Naazron Abdul Yusof ) உறுதிப்படுத்தினார்.
நான்கு மோட்டார் சைக்கிள்களும் ஒரு காரும் அம்பாங்கை நோக்கி சென்று கொண்டிருந்தபோது அம்பாங்கிலிருந்து வந்த மற்றொரு கார் Jalan Hulu Langat – Ampang சாலையில் எதிரேயுள்ள தடத்தில் நுழைந்ததில் மோட்டார் சைக்கிள்களை மோதியது.
இந்த விபத்தில் இதர ஐந்து மோட்டார் சைக்கிள்களில் அமர்ந்திருந்தவர்களும் அதன் ஓட்டுனர்களும் காயம் அடைந்தததைத் தொடர்ந்து சிகிச்சைக்காக அம்பாங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.
அந்த விபத்தில் இரு கார் ஓட்டுனர்கள் காயம் அடையவில்லை என்பதோடு இவ்விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக நஸ்ரோன் தெரிவித்தார்.