கோலாலம்பூர், பிப்ரவரி-6 – முன்னாள் பிரதமர் துன் Dr மகாதீர் முஹமட்டின் அதிகாரப்பூர்வ X தளப் பக்கம் hack செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை முதலே @chedetofficial பக்கத்தைப் பார்க்க முடியவில்லை.
இதையடுத்து 1.3 மில்லியன் பின் தொடர்பாளர்களைக் கொண்ட அப்பக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதாக, மகாதீரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, மகாதீரின் X தளத்தை ஊடுருவிய மர்ம நபர்கள், கிரிப்தோ நாணயம் தொடர்பான விளம்பரத்தை அதில் பதிவேற்றினர்.
எனினும், பதிவேற்றப்பட்ட 1 மணி நேரத்தில் அவ்விளம்பரம் நீக்கப்பட்டது.