Latestஅமெரிக்காஉலகம்சிங்கப்பூர்

பெண்கள் விளையாட்டுகளில் திருநங்கை பங்கேற்க தடை விதித்தார் டிரம்ப்

வாஷிங்டன், பிப்ரவரி-6 – பெண்கள் விளையாட்டுகளில் திருநங்கை விளையாட்டு வீரர்கள் பங்கேற்பதைத் தடை விதிக்கும் முக்கிய உத்தரவில், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

“பெண்கள் விளையாட்டுகளில் இருந்து ஆண்களைத் விலக்கி வைத்தல்” என அவ்வுத்தரவுக்குப் பெயரிடப்பட்டுள்ளது.

மீண்டும் பதவிக்கு வந்ததிலிருந்து திருநங்கைகளை குறிவைத்து அவர் மேற்கொண்ட புதிய நடவடிக்கை இதுவாகும்.

இந்த நிர்வாக உத்தரவின் மூலம் பெண்கள் விளையாட்டு மீதான போர் முடிவுக்கு வந்திருப்பதாக, வெள்ளை மாளிகையில் ஏராளமான குழந்தைகள் மற்றும் விளையாட்டு வீராங்கனைகள் சூழ்ந்திருக்க, டிரம்ப் பெருமையுடன் கூறினார்.

“பெண் விளையாட்டு வீரர்களின் பெருமைமிக்க பாரம்பரியத்தை நாம் பாதுகாப்போம்; திருநங்கைகள் என்ற அடையாளத்தில் ஆண்கள் இனி பெண்களை அடிக்கவோ, காயப்படுத்தவோ, ஏமாற்றவோ அனுமதிக்க மாட்டோம்; இனிமேல், பெண்கள் விளையாட்டு பெண்களுக்கு மட்டுமே” என பலத்த கைத்தட்டலுக்கு மத்தியில் டிரம்ப் சொன்னார்.

இந்த உத்தரவானது, திருநங்கை விளையாட்டு வீரர்கள் பெண்கள் அணிகளில் போட்டியிட அனுமதிக்கும் பள்ளிகளுக்கு, மத்திய அரசாங்கத்தின் மானியங்களை மறுக்க அரசு நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.

2028 லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பு, திருநங்கை விளையாட்டு வீரர்கள் குறித்த விதிகளை மாற்ற அனைத்துலக ஒலிம்பிக் மன்றத்தை வலியுறுத்தப் போவதாகவும் டிரம்ப் கூறினார்.

இரண்டாம் தவணையாக அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே இராணுவத்திலிருந்து திருநங்கை ‘கலாச்சாரத்தை’ அகற்றவும், 19 வயதுக்குட்பட்டவர்கள் பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதைக் கட்டுப்படுத்தவும் டிரம்ப் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!