![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2025/02/MixCollage-07-Feb-2025-03-07-PM-3966.jpg)
பத்து பிராண்டாம், பிப் 7 – மலாக்கா பத்து பிராண்டாம் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் இம்மாதம் 11 ஆம்தேதி தைப்பூச திருவிழா மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு மறுநாள் இரத ஊர்வலமும் நடைபெறவிருக்கிறது.
தைப்பூசத்திற்கு முதல் நாள் அதாவது திங்கட்கிழமை 10 ஆம்தேதி இரவு 8.30 மணியளவில் கலச பூஜையும் , அதனைத் தொடர்ந்து விநாயகருக்கு பொங்கல் வைக்கும் வைபவமும் மிகவும் கோலாமாக நடைபெறும்.
தைப்பூச தினத்தன்று விடியற்காலை 5 மணிக்கு நித்ய பூஜை, காப்பு கட்டுதல் மற்றும் பூர்வங்க விக்னேஸ்வர பூஜையும் , அன்றைய தினம் காலை 8.30 மணி தொடங்கி ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் பால் குடம் மற்றும் காவடிகளை எடுத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றுவார்கள்.
மகேஸ்வர பூஜைக்குபின் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும். மறுநாள் 12 ஆம்தேதி மாலை மணி 4.30க்கு மேல் இதர ஊர்வலமும் நடைபெறும்.
தைப்பூச நிகழ்ச்சியில் பக்தர்கள் அனைவரும் திரளாக வந்து கலந்துகொள்ளும்படி ஆலய நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேல்விவரங்களுக்கு கீழ்கானும் எண்களில் தொடர்புகொள்ளலாம்.