
சாந்தியாகோ, பிப்ரவரி-14 – தென்னமரிக்க நாடான ச்சிலியில் கடலில் பாய்மர படகில் சென்ற இளைஞரை திமிங்கலம் விழுங்கிய வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் தனது தந்தையுடன் பாய்மர படகு பயணத்தில் ஈடுபட்ட போதே, Adrian Simancas எனும் அவ்வாடவர் தனது வாழ்நாளின் அந்த பரபரப்பான வினாடிகளை எதிர்கொண்டார்.
நீல வெள்ளை நிறத்திலான Humpback வகை திமிங்கலம் திடீரென Adrian-னின் படகுக்குக்கு கீழிருந்து தனது அகன்ற வாயைப் பிளந்து, அவரை படகோடு விழுங்கியது.
திமிங்கலம் வாயுக்குள் போனவர் தனது ‘கதை’ முடிந்தது என நினைத்த நேரத்தில், அடுத்த சில வினாடிகளில் திமிங்கலம் படகோடு Adrian-னை வெளியில் கக்கியது.
பின்னால் இன்னொரு படகில் வந்துக்கொண்டிருந்த Adrian-னின் தந்தை Dell Simancas அக்காட்சிகளைக் கேமராவில் பதிவுச் செய்திருக்கிறார்.
சில வினாடிகளுக்கு மகனைக் காணாது தாம் துடிதுடித்துப் போனதாகக் கூறிய Dell, நல்ல வேளையாக மகனை திமிங்கலம் உடனடியாகக் கக்கி விட்டதாகக் கூறினார்.
திமிங்கலத்தின் வாயினுள் இருட்டில் 3 வினாடிகள் இருந்த அந்த பயங்கரமான 3 வினாடிகளை வாழ்நாளில் மறக்க மாட்டேன் என Adrian வருணித்தார்.