
ஜெராம் பாடாங், பிப்ரவரி-15 – புதியப் பள்ளி தவணை தொடங்கவிருப்பதை முன்னிட்டு பெர்சாத்து கட்சியின் நெகிரி செம்பிலான், ஜெராம் பாடாங் சட்டமன்ற ஒருங்கிணைப்புக் குழு ‘பள்ளிக்குத் திரும்பலாம்’ எனும் நல்லெண்ணத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
மாநிலம் முழுவதும் வசதி குறைந்த மாணவர்களுக்கு 4,000 இலவச பள்ளிப் பைகளை வழங்குவதே அத்திட்டமாகும்.
அவ்வகையில் ஜெராம் பாடாங்கில் 1,000 பள்ளிப் பைகள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக, நேற்று ஃபெல்டா பாலோங் சத்து மற்றும் பாலோங் டுவா குடியேற்றப் பகுதிகளில் இலவசப் பள்ளிப் பைகள் விநியோகிக்கப்பட்டன.
ஜெராம் பாடாங் சட்டமன்றத்திற்கான கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டத்தோ ஆர். ஸ்ரீ சஞ்சீவன் தலைமையிலான குழு அதில் களமிறங்கியது.
ஒரு சிலரால் இலவசக் கல்வியெல்லாம் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்டன; ஆனால் இன்றோ, பள்ளிக் கட்டணங்களே உயர்ந்து பெற்றோர்களுக்கு சுமையாகி விட்டன.
வசதியானச் சூழலில் கல்விக் கற்பது ஒவ்வொரு மாணவரின் சம உரிமையாகும்.
ஆக, இந்த இலவசப் பள்ளிப் பைகள் ஒரு சிறிய உதவியாயினும், பள்ளித் திறந்ததும் மாணவர்கள் உற்சாகமாகச் செல்ல துணைப் புரியுமென அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
கடைசிக் கட்டமாக இன்று பஹாவில் இந்த இலவசப் பள்ளிப் பைகள் வழங்கப்படும் என டத்தோ சஞ்சீவன் கூறினார்.