Latestமலேசியா

மலாய் மொழி தெரியாததற்காக ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர்தான் மன்னிப்பு கேட்க வேண்டும் – பெர்லீஸ் முப்தி

கோலாலம்பூர், பிப் 18 – மலாய் மொழி தெரியாததற்காக ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர்தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என பெர்லீஸ் முப்தி முப்தி முகமட் அஸ்ரி ஸைனுல் அபிடின் ( Mohd Asri Zainul Abidin ) தெரிவித்திருக்கிறார்.

அதோடு ராயருக்கு எதிரான தனது அறிக்கையை தற்காத்துப் பேசியுள்ள அவர் , தனது அறிக்கை இந்நாட்டிலுள்ள இந்து சமயத்தவர்களை சிறுமைப்படுத்துவதாக இல்லையென தெரிவித்திருக்கிறார்.

தனது அறிக்கையில் எங்கே இதர சமயத்தவரை சிறுமைப்படுத்தியுள்ளது என்றும் முகமட் அஸ்ரி வினவினார்.

எனது அறிக்கை வெளியிடப்பட்டு இரண்டு வாரத்திற்குப்பின் தனக்கு அந்த அறிக்கை சிறுமைப்படுத்தியிருப்பதாக ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினருக்கு உணர்வு வந்துள்ளது.

நாட்டின் பிரதான மொழியாக இருக்கும் மலாய் மொழியை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் புரிந்துகொள்ளாமல் இருப்பது குறித்து தாம் ஆச்சரியம் அடைந்திருப்பதாக முகமட் அஸ்ரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

ராயரின் சமயத்தை நான் எங்கே புண்படுத்தியுள்ளேன்?

மற்றவர்களின் சமயத்தில் அனைத்து தரப்பினரும் தலையிடக்கூடாது எனபதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என்றுதான் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தேன்.

இந்து சமயத்தைச் சேர்ந்த எனது நண்பர்கள் கூட எனது அறிக்கையை ஆதரித்ததோடு அவர் வரம்பை மீறியுள்ளதாகவும் தெரிவித்திருப்பதாக முகமட் அஸ்ரி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!