
செபராங் பிறை, பிப்ரவரி-19 – மேலவை உறுப்பினர் செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஏற்பாட்டில் பினாங்கு, செபராங் பிறையில் உள்ள 20 தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 800 மாணவர்களுக்கு, பள்ளிக்குத் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன.
புதியக் கல்வியாண்டு தொடங்கியிருப்பதை முன்னிட்டு ‘பள்ளிக்குத் திரும்புவோம்’ திட்டத்தின் வாயிலாக, செவ்வாய்க்கிழமை 11 பள்ளிகளிலும் இன்று புதன்கிழமை 9 பள்ளிகளிலும் அவ்வுதவிகள் மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
மாணவர்கள், ஒரு ஜோடி பள்ளிச் சீருடை, காலணி, காலுறை ஆகியவற்றைப் பெற்றனர்.
பிள்ளைகளின் பள்ளித் தேவைகளைத் தயார் செய்வதில் வசதி குறைந்த B40 குடும்பங்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில், இத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
நிதி ஒதுக்கீடு மூலமாக அல்லாமல், செனட்டர் என்ற முறையில் தனது 6 மாத சம்பளப் பணத்தில் Dr லிங்கேஷ் இவ்வுதவிகளை வழங்கினார்.
“இது, மக்களுக்கே திருப்பித் தரும் முயற்சியின் ஒரு பகுதியாகும்; வரும் ஆண்டுகளிலும் இம்முயற்சி தொடரும்” என அவர் உறுதியளித்தர்.
ஒளிமயமான எதிர்காலத்திற்கு கல்வியே முக்கியம்; இன்று நாம் செய்யும் ஒவ்வொரு சிறு முயற்சியும் எதிர்கால தலைமுறைக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்;
அனைவருக்கும் தரமான கல்வி வாய்ப்பும் வசதியும் கிடைப்பதை உறுதிச் செய்வோம் என்றார் அவர்.
இத்திட்டம் வெற்றியடைய துணைப் புரிந்த ஆசிரியர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் Dr லிங்கேஷ் நன்றித் தெரிவித்துக் கொண்டார்.