Latestமலேசியா

நாடு முழுவதிலும் RM3.8 பில்லியன் மின்-கழிவுகள் உபகரணங்கள் பறிமுதல்

கோலாலம்பூர், பிப் 20 – 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம்தேதி முதல் இவ்வாண்டு பிப்ரவரி 7ஆம் தேதிவரையிலான காலக்கட்டத்தில் சுற்றுச்சூழல் துறையுடன் இணைந்து, நாடு முழுவதும் சட்டவிரோத மின்-கழிவு செயலாக்க நடவடிக்கைகளைத் தடுத்துள்ள போலீசார் RM3.8 பில்லியன் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இந்த பொருட்களில் எடையை நிறுக்கும் இயந்திரங்கள் மற்றும் டின்களை பதப்படுத்தும் கருவிகளும் அடங்கும் என புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத்துறையின் இயக்குனர் அஸ்மி அபு காசிம் (Azmi Abu Kassim) தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் சுற்றுச்சூழல் துறையின் தலைமை இயக்குனர் வான் அப்துல் லத்திப் வான் ஜபாரும் (Wan Abdul Latiff Wan Jaffar) கலந்துகொண்டார்.

பொது நடவடிக்கைப் படை, வனவிலங்கு குற்றவியல் துறை , மெரின் (marine) போலீஸ் மற்றும் கூட்டரசு சேமப்படை பிரிவு ஆகிய தரப்பினரை உள்ளடக்கிய நடவடிக்கையின்போது 90 குற்றச்செயல் சம்பவங்கள் தொடர்பில் 538 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இரண்டு முதல் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்களும் அடங்குவர் என இன்று புக்கிட் அமானில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அஸ்மி தெரிவித்தார்.

மின் கழிவுகளில் தங்கம், வெள்ளி, தாமிரம், பிளாட்டினம் (platinum ) மற்றும் பல்லேடியம் (palladium ) போன்ற விலைமதிப்பற்ற உலோகங்கள் உள்ளன.

அவை அதிக மறுசுழற்சி மதிப்பைக் கொண்டுள்ளன. இவை, இரும்பு, தகரம், தாமிரம் ஆகியவற்றால் பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பவதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!