Latestமலேசியா

கெர்லிங் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் பள்ளிச் சீருடை வாங்க லெஜென்டரி ரைடர்ஸ் கிளப் பற்றுச் சீட்டு அன்பளிப்பு

 

கெர்லிங், பிப்ரவரி-22 – லெஜென்டரி ரைடர்ஸ் மோட்டார் சைக்கிள் கிளப் ஏற்பாட்டில் பள்ளிச் சீருடை வாங்குவதற்கான பற்றுச் சீட்டுகள் கெர்லிங் தோட்ட தமிழ்ப்பள்ளியில் பயிலும் 20 மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த கிளப்பின் மூலம் இவ்வாண்டு பள்ளிச் சீருடைகள், புத்தகப் பைகள், காலணிகள், எழுத்து உபகரணங்கள் மற்றும் பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்ட 15 பள்ளிகளில் இது கடைசிப் பள்ளியாகும்.

இந்தப் பள்ளியோடு சேர்த்து, வசதி குறைந்த B40 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 200 மாணவர்களுக்கு
பற்றுச் சீட்டுகள் வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளன.

ஜீவானந்தம் ஏற்பாட்டில் பல கொடைவள்ளல்கள் இந்த நிகழ்வுக்கு பொருளுதவி அளித்தனர்.

அவர்களுக்கு நன்றி கூறிய லெஜென்ட்ரி ரைடர்ஸ் தோற்றுவிப்பாளரும் தலைவருமான மகேந்திரமணி, அடுத்தாண்டு 500 ஏழை மாணவர்களுக்கு பள்ளிச் சீருடைகள் வழங்க ஏற்பாடு செய்யப்படவிருப்பதாக குறிப்பிட்டார்.

அதற்கும் பொருளுதவி அளித்து ஆதரவு அளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

இவ்வேளையில் கெர்லிங் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கலைவாணன் கிருஷ்ணன், தமிழ்ப்பள்ளிக்கு மேம்பாட்டுக்கு உதவவும் மாணவர்களின் திறன்களை வளர்க்கவும் லெஜென்டரி ரைடர்ஸ் மலேசியா எடுத்திருக்கும் முயற்சியை பாராட்டினார்.

நல்லெண்ண நோக்கத்திலான இம்முயற்சிக்கு வணக்கம் மலேசியா ஊடக ஆதரவாளராக இருப்பதற்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!