
ரொம்பின், பிப் 25 – Muadzam Shah, Sungai Jubauவிற்கு அருகே சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் கம்போடியாவைச் சேர்ந்த இரண்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பஹாங் மாநில அமலாக்க பிரிவின் ஒத்துழைப்புடன் பொது நடவடிக்கை குழு மேற்கொண்ட அந்த சோதனை நடவடிக்கையில் சில சுரங்க கருவிகளுடன் தங்கத் துகள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொது நடவடிக்கை குழுவின் அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
நீர் இயந்திரம் , மின்சார வசதிக்கான இரண்டு இயந்திரங்கள், இரு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் தங்க துகல்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றின் மொத்த மதிப்பு 96,000 ரிங்கிட்டாகும். கைது செய்யப்பட்ட 33 மற்றும் 52 வயதுடைய இரு ஆடவர்களில் ஒருவருக்கு அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லை.
அந்த இரு சந்தேகப்பேர்வழிகளுடன் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும் ரொம்பின் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டன.