
பாயான் லெப்பாஸ், மார்ச்-5 – பினாங்கு பாயான் லெப்பாஸ், புக்கிட் ஜம்புலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் குப்பைகள் கொட்டுமிடத்தில், 700-க்கும் மேற்பட்ட உயிருள்ள தோட்டாக்கள் அடங்கிய பை கண்டெடுக்கப்பட்டது.
நேற்று பிற்பகல் வாக்கில் பொது மக்கள் அதனைக் கண்டெடுத்து போலீஸுக்குத் தகவல் கொடுத்ததாக, தீமோர் லாவோட் போலீஸ் தலைவர் ACP Abdul Rozak Muhammad கூறினார்.
அந்த Kaliber .22 வகை தோட்டாக்கள் அடங்கிய பையை மர்ம நபர் அங்கு விட்டுச் சென்றுள்ளார்.
இதனைக் கடுமையாகக் கருதுவதாகக் கூறிய Abdul Rozak, 1960-ஆம் ஆண்டு சுடும் ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் அச்சம்பவம்
பல கோணங்களில் விசாரிக்கப்படுவதாகச் சொன்னார்.
தகவல் தெரிந்த பொது மக்கள் அருகிலுள்ள போலீஸ் நிலையங்களைத் தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.