
கோலாலம்பூர், மார்ச 7 – பேரா, ஆயர் கூனிங் ( Ayer Kuning ) சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறும்.
வேட்பு மனுத் தாக்கல் ஏப்ரல் 12 ஆம் தேதியும் முன்கூட்டியே நடைபெறும் வாக்களிப்பு ஏப்ரல் 22ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்
டத்தோஸ்ரீ ரம்லான் ஹருன் ( Ramlan Harun ) இன்று அறிவித்தார்.
ஆயர் கூனிங் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த் 31,897 வாக்காளர்கள் இந்த இடைத் தேர்தலில் சுமுகமாக வாக்களிக்கும் பொருட்டு இந்த இடைத் தேர்தல் செலவின் தேவைக்காக 2.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக ரம்லான் கூறினார்.