
ஈப்போ, மார்ச்-15 -பேராக், தெலுக் இந்தான், ச்சங்காட் ஜோங்கில் நேற்றிரவு கலவரத்தை தூண்டியதன் பேரில், தொழிற்சாலை ஊழியர்களான 13 நேப்பாளிகள் கைதாகினர்.
ஜாலான் ச்சங்காட் ஜோங், பத்து லாப்பானில் இரவு 9.45 மணிக்கு ஏற்பட்ட சாலை விபத்தில், சக நாட்டவர் ஒருவர் கொல்லப்பட்டதே அச்சம்பவத்துக்குக் காரணமாகும்.
இதனால் சினமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 1,000 தொழிற்சாலை ஊழியர்கள் அங்கு ஒன்றுகூடி போக்குவரத்தை மறைத்துக் கொண்டனர்.
தகவல் கிடைத்து, தெலுக் இந்தான் போலீஸ் கூழு சம்பவ இடம் விரைந்து, விடியற்காலை 2 மணிக்கு நிலைமையை முழுமையாகக் கட்டுப்படுத்தியது.
தொழிற்சாலை ஊழியர்களும் சமாதானமாகி தங்குமித்திற்குத் திரும்பியதாக, ஹிலிர் பேராக் போலீஸ் தலைவர் பக்ரி சைனால் அபிடின் கூறினார்.
கைதான 13 பேரும் விசாரணைக்காக 4 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அதே சமயம் மரண விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய வாகனமோட்டிக்கும் போலீஸ் வலை வீசி வருகிறது.
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கூட்டமாக சாலைப் போக்குவரத்தை மறைத்துக் கொண்டு கலவரத்தில் ஈடுபட்ட வீடியோக்கள் முன்னதாக facebook-கில் வைரலாகியிருந்தன.