
கோலாலம்பூர், மார்ச்-15 – மலாய்க்காரர் மற்றும் பூமிபுத்ரா அடையாளத்தை சுயநலத்துக்காகப் பயன்படுத்தி சொத்துக்களைக் குவிப்போருக்கு பிரதமர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர்களின் பொறுப்பற்றச் செயலாலும் பேராசையாலும், பூமிபுத்ரா சமூகத்தை உயர்த்தும் முயற்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி கணிசமாக சுரண்டப்பட்டுள்ளது.
“நீங்களும் உங்கள் குடும்பமும் செல்வத்தில் கொழிக்கவா மக்கள் உங்களைத் தேர்ந்தெடுத்தார்கள்? உங்களிடத்தில் அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை தவறாக உபயோகிக்காதீர்” என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவுறுத்தினார்.
தவறான மற்றும் மோசமான நிர்வாகத்தால் இந்நிலை உருவாகியுள்ளது.
ஆனால் அவர்களை விட மாட்டோம்; சிக்கினால் நடவடிக்கை நிச்சயம் என, மாரா நிறுவனத்தின் 59-ஆவது நிறைவாண்டு கொண்டாட்டத்தில் பேசிய போது பிரதமர் கூறினார்.