Latestமலேசியா

ஏர் ஆசியா மலேசியா ஆஸ்திரேலியாவில் தனது சேவையை விரிவுபடுத்துகிறது: டார்வினுக்கு புதிய வழித்தடம்

டார்வின் , மார்ச் 17 – டார்வினுக்கு புதிய வழித்தடத்துடன் ஆஸ்திரேலியாவில் ஏர் ஆசியா மலேசியா தனது சேவையை விரிவுபடுத்துகிறது.

கோலாலம்பூரிலிருந்து டார்வின் நகருக்கான ஒரு வழி பயணத்திற்கு குறைந்த கட்டணமாக 299 ரிங்கிட் விதிக்கப்படுகிறது.

இவ்வாண்டு ஜூன் 27 ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவின் வடக்குப் பிரதேசத்தின் துடிப்பான தலைநகரை ஆராய்வதற்கு பயணிகளுக்கு அதிக மலிவு விலை விருப்பங்கள் கிடைக்கும், வாரத்திற்கு நான்கு விமானங்கள் டார்வின் நகருக்கான சேவையில் ஈடுபடும் என ஏர் ஆசியா மலேசியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இன்று டர்வின் விமான நிலையத்தில் கோலாலம்பூர் – டர்வின் விமானச் சேவையை வட ஆஸ்திரேலிய பிரதேசத்திற்கான வர்த்தகம் மற்றும் ஆசிய நட்புறவுகளுக்கான அமைச்சர் Robyn Cahill தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஏர் ஆசியா மலேசியாவின் தலைமை செயல் அதிகாரி கேப்டன் டத்தோ Fareh Mazputraவும் கலந்துகொண்டார்.

சிலிர்ப்பூட்டும் சாகசங்கள் மற்றும் வளமான கலாச்சார அனுபவங்களுக்கான சரியான நுழைவாயிலாக டார்வின் திகழ்கிறது.

மிண்டில் (Mindil ) கடற்கரையில் உள்ள பிரமிக்க வைக்கும் சூரிய அஸ்தமனங்கள் முதல் குரோகோசொரஸ் ( Crocosaurus Cove ) வில் உள்ள வனவிலங்குகள், இரட்டை யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள கண்கவர் ககாடு (KaKadu) தேசிய பூங்காவை அனுபவிக்கும் பாதை, அதன் அற்புதமான இயற்கை அழகு மற்றும் வளமான பூர்வீக கலாச்சாரத்திற்காக டார்வின் புகழ்பெற்ற இடமாக திகழ்கிறது.

இந்த நகரம் அனைத்து பயணிகளுக்கும் மறக்க முடியாத அனுபவங்களை நிச்சயமாக உறுதியளிக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!