Latestமலேசியா

புஸ்பாகோம் பரிசோதனை இடங்களை இடைதரகர்கள் RM750 வரை விற்பனை செய்கின்றனர்

ஷா அலாம், மார்ச் 17 – ரன்னர்கள் எனப்படும் இடைத்தரகர்கள் புஸ்பாகோம் (Puspakom ) மைய சோதனை சந்திப்பு இடங்களை அசல் விலையை விட 200 மடங்குக்கு மேல் மறுவிற்பனை செய்வதன் மூலம் கொள்ளை லாபம் ஈட்டி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த இடைத்தரகர்கள் புஸ்பாகோம் பரிசோதனை மையத்தில் பல சந்திப்பு இடங்களை விற்பதன் மூலம் கிட்டத்தட்ட 750 ரிங்கிட் லாபம் ஈட்டுவதாக புஸ்பாகோம் தெரிவித்துள்ளது.

அவர்கள் ஒரே chassis எண்ணைப் பயன்படுத்திய போதிலும் வெவ்வேறு வாகன பதிவு எண்களை பயன்படுத்தி பல சந்திப்பு இடங்களைப் பெறுவது ஒரு தந்திரமாகும் என புஸ்பாகோம் தலைமை நிர்வாக அதிகாரி மாமுட் ரசாக் பஹ்மான் ( Mahmood Razak Bahman ) கூறினார்.

சாலை போக்குவரத்துத் துறையின் உதவியோடு இது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

யார், ஏன் இதைச் செய்கிறார்கள் என்பதை நாங்கள் ஆராய்ந்து வருவதோடு , சம்பந்தப்பட்ட இடைத் தரகர்களை நாங்கள் அழைப்போம் என சாலை போக்குவரத்துத்துறையின் தலைமை இயக்குநர் Datuk Aedy Fadly Ramli இன்று ஷா அலாம் புஸ்பகோமிற்கு வருகை புரிந்தபோது நடைபெற்ற ஒரு விளக்கக் கூட்டத்தில் தெரிவித்தார்.

பல இடங்களை முன்பதிவு செய்து லாபத்திற்காக மறுவிற்பனை செய்து வரும் இடைத்தரகர்கள் ஆய்வு இடங்களை மறுவிற்பனை செய்வதைத் தடுக்க Puspakom Sdn Bhd கடுமையான நடவடிக்கையை அறிவித்ததாக இதற்கு முன்னர் தெரிவிக்கப்பட்டது.

இந்த தவறான நடவடிக்கையைத் தடுக்க, புஸ்பாகோம் இப்போது ஒரே வாகனப் பதிவு எண்ணுக்கு பல முன்பதிவுகளைக் கட்டுப்படுத்தும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!