
கோலாலம்பூர், ஏப்ரல்-13, பேராக், ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்ல் பிரச்சார காலம் நெடுகிலும் சமூக ஊடக பயன்பாட்டை, தொடர்புத் துறை அமைச்சு தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணித்து வரும்.
தேர்தல் ஆதாயத்துக்காக, பொய்ச் செய்திகள், அவதூறுகள் மற்றும் 3R எனப்படும் இனம், மதம், ஆட்சியாளர்களை நிந்திக்கும் பதிவுகள் பரப்பப்படுவதைத் தடுக்க அது அவசியமென, அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
மீறி அச்செயலில் ஈடுபடுவோர் தப்பிக்க முடியாது; அவர்களின் பதிவுகளையும் கருத்துகளையும் MCMC அடையாளம் கண்டு விடும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அண்மையில் திருத்தப்பட்ட தொடர்பு-பல்லூடக ஆணையச் சட்டத்தின் கீழ் 500,000 ரிங்கிட் வரையில் அபராதம் விதிக்கப்படலாம்.
எனவே, உணர்ச்சிப்பூர்வமான விஷயங்களைத் தூண்டி அதிர் குளிர் காயாமல், பொறுப்புடன் பரப்புரைகளை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
கோலாலம்பூர், லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் பங்கேற்ற பிறகு அதன் எம்.பியுமான ஃபாஹ்மி செய்தியாளர்களிடம் பேசினார்.
ஏப்ரல் 26 ஆயர் கூனிங் இடைத் தேர்தலில் BN, PN, PSM ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.