
உத்தர பிரதேசம், ஜூன்-11 – இந்தியா, உத்தர பிரதேசத்தில் குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்ற பெண்ணிடமிருந்து ஒரு குரங்குக் கூட்டம் கைப்பபைகளை பறித்துக் கொண்டு ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காரணம், உணவு என்றெண்ணி குரங்குகள் தூக்கிச் சென்றது வெறும் பைகள் அல்ல; சுமார் 1 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான நகைகள் வைக்கப்பட்ட பையாகும்.
கோயிலுக்குச் செல்லும் முன் ஒரு பாதுகாப்புக்காக நகைகளைக் கழற்றி அப்பெண் கைப்பைக்குள் வைத்துள்ளார்.
இந்நிலையில் கோயிலிலிருந்து கிளம்பும் போது குரங்குகள் கைவரிசை காட்டியதால் குடும்பபே பதற்றமடைந்தது.
நாலாப்புறமும் குரங்குகளை தேடியதோடு போலீஸுக்கும் அவர்கள் தகவல் கொடுத்தனர்.
அப்பெண்ணின் அதிர்ஷ்டம் – அருகாமையில் உள்ள மைதானத்தில் நகைககள் அடங்கிய அப்பையை குரங்குகள் வீசிச் சென்றன.
சில மணி நேர தேடல்களுக்குப் பிறகு அதனைக் கண்டெடுத்த போலீஸார், நகைகளோடு அப்பையை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.