
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 9 – இன்று அதிகாலை, பெட்டாலிங் ஜெயா ஜாலான் டாண்டாங்கிலுள்ள மளிகைக் கடை கிடங்கு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதென்று சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) செயல்பாட்டு உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தின் போது கிடங்குக்குள் இருந்த மியன்மார் மற்றும் இந்திய நாட்டைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்களையும் தீயணைப்பு துறையினர்கள் வெற்றிகரமாக மீட்டுள்ளனர் என்றும் அவர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அந்த மளிகைக் கிடங்கில், 40 சதவீதம் தீ விபத்தினால் சேதம் ஏற்பட்டுள்ளதென்றும் சுமார் 50 நிமிடங்களில் தீயணைப்பு துறையினர்கள் அந்தத் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர் என்றும் அறியப்படுகின்றது.
இந்தத் தீ விபத்தில் ஏற்பட்ட மொத்த இழப்புகள் இன்னும் கணக்கிடப்படவில்லை என்றும் விபத்திற்கான காரணத்தை கண்டறிய மேல் விசாரணை தொடரப்பட்டுள்ளது என்றும் அஹ்மத் முக்லிஸ் கூறியுள்ளார்.