
ஈப்போ, ஜூலை-12 – இப்போ Fish Garden இரவுச் சந்தையில் நேற்று திடீரென காரொன்று கட்டுப்பாட்டை இழந்து கடைகளை மோதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இரவு 8.25 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் ஒரு வியாபாரி உட்பட மூவர் காயமடைந்தனர்.
அம்மூன்று பெண்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஜெலாப்பாங் சட்டமன்ற உறுப்பினர் Cheah Pou Hian உறுதிப்படுத்தினார்.
கார் மோதியதில் இரு கடைகள் சேதமடைந்தன.
காரோட்டி ஒரு முதியவர் என நம்பப்படுகிறது; அச்சம்பவத்தை போலீஸ் விசாரிக்கிறது.