
செப்பாங், ஜூலை-13- SIC எனப்படும் செப்பாங் அனைத்துலப் பந்தயத் தளத்தில் நேற்று நடைபெற்ற ஒரு பந்தயத்தின் நடுவே, BMW கார் தீப்பற்றிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதியம் 12 மணி வாக்கில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், எரிபொருள் டாங்கியில் ஏற்பட்ட கசிவால் நான்காவது வளைவில் கார் தீப்பற்றியது.
இதையடுத்து KLIA தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.
தீயில் அக்கார் முழுவதுமாக எரிந்துபோனது.
எனினும் அதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என சிலாங்கூர் தீயணைப்பு – மீட்புப் படை கூறியது.