
நமது நாட்டில், செயற்கை நுண்ணறிவு (AI) chipகளை பெரிய அளவில் கடத்தியதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் Tengku Zafrul Aziz விளக்கமளித்துள்ளார்.
மலேசியாவில் AI chipகளுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், இது சர்வதேச அளவில் சில எச்சரிக்கைகளை எழுப்பியிருக்கின்றது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முதலீடு, வர்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சின் அறையாண்டு கால அடைவு நிலை குறித்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் இத்தகவலை கூறினார்
இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து வந்த உயர் செயல்திறன் கொண்ட chipகளுக்கான ஏற்றுமதி விதிகளை அமைச்சு இவ்வாரம் கடுமையாக்கியுள்ளது என்றும் அறியப்படுகின்றது.
மேலும்,உள்ளூர் விசாரணைகளில் அவை விற்கப்பட்டதாகக் கூறப்படும் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று Tengku Zafrul மீண்டும் வலியுறுத்தியுள்ளார்