
கோலாலம்பூர், ஜூலை 23 – SARA எனப்படும் அடிப்படை ரஹ்மா உதவி திட்டங்களை பெறும் 5.4 மில்லியன் மக்களில் 4.9 மில்லியனுக்கும் அதிகமானோர் ஜூன் 14 ஆம் ஆம் தேதி வரை தங்கள் அடையாள கார்டுகளை பயன்படுத்தி பதிவுசெய்யப்பட்ட வளாகங்களில் அடிப்படைப் பொருட்களை வாங்கியுள்ளனர்.
இந்த எண்ணிக்கை நான்காவது மாத உதவித் திட்டத்தில் 92 விழுக்காடு ஒட்டுமொத்த பயன்பாட்டு விகிதத்தைப் பிரதிபலிப்பதாக நாடாளுமன்ற இணையத்தளத்தில் வெளியிட்ட எழுத்துப்பூர்வ பதிலில் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் SARA பெறுநர்களின் எண்ணிக்கை 700,000த்திலிருந்து 5.4 மில்லியனாக கணிசமாக அதிகரித்துள்ளது. SARA அணுகுமுறை தேவைப்படுபவர்களுக்கு இலக்கு உதவி வழங்குவதற்கான அரசாங்கத்தின் நோக்கத்துடன் ஒத்துப்போகிறது.
SARA செயல்படுத்தல் வழிமுறை, அந்த உதவித் திட்டத்தை பெறுபவரின் குடும்பத்திற்கான உணவு உட்பட அடிப்படைப் பொருட்களின் நன்மைகளைப் பெறுவதை உறுதி செய்வதாகும்.
இந்த ஆண்டு SARA திட்டத்தின் செயல்பாட்டின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு, பெர்லிஸில் 96 விழுக்காட்டினரும், அதைத் தொடர்ந்து சபா, கெடா, கிளந்தான் மற்றும் தெரெங்கானு ஆகிய இடங்களில் பதிவுசெய்யப்பட்ட சில்லறை விற்பனைக் கடைகளில் MyKad டைப் பயன்படுத்தி 95 விழுக்காட்டினர் உதவிப் பொருட்களை வாங்கியுள்ளதாக பக்காத்தான் ஹராப்பான் கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் கூ போய் தியோங் (Khoo Poay Tiong) எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் நிதி அமைச்சு இந்த அறிக்கையை வெளியிட்டது.