Latestமலேசியா

ஜூருவில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் தீ விபத்து

ஜூரு, ஜூலை 28 – Juru வில் வடக்கு-தெற்கு விரைவுச்சாலைக்கு அருகில், திறந்தவெளிப் பகுதியில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் மரக் குவியல் காரணமாக இன்று காலை பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. எனினும் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இன்று காலை மணி 11.32 அளவில் இந்த தீவிபத்து குறித்து தாங்கள் அவசர அழைப்பை பெற்றதாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் துணை இயக்குநர் போன் பாகுன் பிரான்சிஸ் ( John Fagun Francis ) தெவித்தார். Bandar Perda தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து வந்த தீயணைப்புப் படையினருடன் , பெராய் தீயணைப்பு மீட்புத்துறை நிலையத்தின் தீயணைப்பு வீரர்களும் தீயைணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பயன்படுத்தப்பட்ட பொருட்கள் வணிக வளாகத்தில் திறந்தவெளியில் இருந்த பொருட்கள் மற்றும் மரக் குவியல் தீயில் எரிந்து நாசமானது. நண்பகல் 12 மணியளவில் தீ கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. பிளஸ் நெடுஞ்சாலையின் Juru வெளியேறும் இடத்திற்கு அருகில் அதிக போக்குவரத்து நெரிசல் இருந்ததால், தீயின் காட்சிகள் சமூக ஊடகங்களிலும் வைரலாகின. ஜூரு மற்றும் சுகுன் ( Sugun ) தன்னார்வ தீயணைப்புத் துறையினரும் தீயை அணைக்கும் நடவடிக்கைக்கு உதவினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!