
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 30- பங்கு வர்த்தக முதலீட்டில் அதிகமான லாபம் வருமென நம்பி முதலீட்டு மோசடியில் 8.7 மில்லியன் ரிங்கிட் இழந்துள்ளார் 53 வயது மருத்துவர் ஒருவர்.
தான் பார்த்த விளம்பரம் ஒன்றின் மூலம் அறிமுகமான ஆடவனிடம் பேசியபோது 520 விழுக்காடு அதிகமான லாபம் கிடைக்குமென கூறப்பட்டதை நம்பி ஏமாந்து அவர் இவ்வளவு பெரிய தொகையை ஏமாந்ததாக தெற்கு ஜோகூர் பாரு போலிஸ் தலைவர் Azrul Hisham Shaffei கூறினார்.
இவ்வருடம் மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை பல முறை சில வங்கி கணக்குகளின் கீழ் 8.7 மில்லியன் ரிங்கிட் செலுத்தப்பட்ட நிலையில், இதுவரை அவர் 6,033 ரிங்கிட் மட்டுமே லாபமாக பெற்றுள்ளார்.
அதையும் 5 லட்சம் ரிங்கிட் முன் பணமாக செலுத்திதான் பெற முடியுமாம். இதனிடையே தான் ஏமாற்றாப்பட்டதை உணர்ந்த அம்மருத்துவர் நேற்று இதுகுறித்து போலிஸ் புகார் செய்துள்ளார்.