Latestமலேசியா

சிலாங்கூர் சுல்தான் அறிவுரைக்கேற்ப பெயரிலிருந்து ‘இஸ்லாம்’ என்ற சொல்லை நீக்கிய SIS மகளிர் அமைப்பு

கோலாலம்பூர், ஜூலை-31- மகளிர் உரிமைப் போராட்டக் குழுவான SIS எனப்படும் Sisters in Islam, சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷாவின் அறிவுரையின் படி, தனது பெயரிலிருந்து ‘Islam’ என்ற சொல்லை நீக்கியிருக்கிறது.

ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதன் அவசரப் பொதுப்பேரவையின் போது அந்தப் பெயர் மாற்றம் குறித்த தீர்மானம் நிறைவேறியது.

இதையடுத்து, பதிவுப் பெற்ற பெயரான SIS Forum (Malaysia) என அவ்வமைப்பு இனி அழைக்கப்படும் என, அதன் நிர்வாக இயக்குநர் Rozana Idris கூறினார்.

SIS இஸ்லாத்துக்கு எதிரானது என நீண்ட காலமாக தவறான புரிதல் நிலவுகிறது; இதற்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளோம் என்றார் அவர்.

பெயரிலிருந்து ‘Islam’ விடுபட்டாலும், இஸ்லாமியக் குடும்பச் சட்டங்களில் பாலின சமத்துவம் மற்றும் நீதியை தாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரப் போவதாக அவர் சொன்னார்.

“பெயரை விட, முஸ்லீம் பெண்களுக்கும் மலேசிய மக்களுக்கும் நாங்கள் என்ன சேவை செய்கிறோம் என்பதே முக்கியம்” என்றார் அவர்.

முஸ்லீம்களைக் குழப்பக் கூடுமென்பதால், SIS தனது பெயரிலோ அல்லது நிறுவனத்தின் எந்தவொரு வெளியீட்டிலோ ‘Islam’ என்ற வார்த்தையை தன்னிச்சையாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என, சிலாங்கூர் சுல்தான் ஜூன் 20-ஆம் தேதி கூறியிருந்தார்.

இஸ்லாத்துக்கு எதிரானவை என SIS போன்ற அமைப்புகள் மீது ஃபத்வா (Fatwa) உத்தரவை வெளியிட முடியாது என, கூட்டசு நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து அவர் அவ்வாறு கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!