
குவாலா திரங்கானு, ஆகஸ்ட்-20 – சாலை வரி காலாவதி ஆனதால் ஓர் ஆடம்பர Lamborghini காருக்கு திரங்கானு சாலைப் போக்குவரத்துத் துறை சீல் வைத்துள்ளது.
குவாலா திரங்கானுவில் 34 வயது ஆடவர் ஓட்டிச் சென்ற அக்கார், Ops Luxury ரோந்து சோதனையில் ஈடுபட்டிருந்த JPJ அதிகாரிகளிடம் சிக்கியது.
சோதனைக்காக, ஒலிப் பெருக்கி வாயிலாக நிறுத்தச் சொன்ன போதும் மறுத்து வேகமாகச் சென்ற காரை, சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் அதிகாரிகள் துரத்திச் சென்றனர்.
பின்னர் ஒருவழியாக பிடிபட்ட அவ்வாடவர் நேரடியாக JPJ அலுவலகம் வர பணிக்கப்பட்டார்.
அங்கு பரிசோதித்ததில், சாலை வரி காலாவதியானது மட்டுமல்லாமல், வாகன காப்பீடும் காலாவதியாகி இருந்தது; வாகனப் பதிவு எண்ணை பட்டையும் விதிமுறைகளை மீறி மாற்றியமைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து உடனடியாக அந்த Lamborghini சீல் வைக்கப்பட்டது.