Latestமலேசியா

நாட்டிலிருந்து வெளியேற தடுக்கப்பட்ட பெண் அரசுக்கு எதிராக வழக்கு தொடுக்கலாம்; மேல் முறையீடு நீதிமன்றம் தீர்ப்பு

கோலாலம்பூர், ஆக 25 – திவாலானதாக தவறாக வகைப்படுத்தப்பட்டு, குடும்ப விடுமுறைக்காக வெளிநாடு செல்வதிலிருந்து தடுக்கப்பட்ட ஒரு இல்லத்தரசியான சுமதி , அரசாங்கத்தின் அலட்சிய் போக்குக்கு எதிராக தனது வழக்கைத் தொடரலாம்.

மூன்று நீதிபதிகளைக் கொண்ட மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்று ஏகமனதாக எஸ் .சுமதியின் வழக்கை நிலைநிறுத்தியது.

அவர் தனது மனுவில் குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குனரை சரியான முறையில் பிரதிவாதியாக பெயர் குறிப்பிட்டுள்ளார் என விசாரணைக்கு தலைமையேற்ற நீதிபதி Collin Lawrence Sequerah தீர்ப்பளித்தார்.

அரசாங்க நடவடிக்கைகள் சட்டம் மற்றும் விளக்கச் சட்டத்தின் கீழ் தேவைப்படும் பொது அதிகாரியாக தலைமை இயக்குநரை பிரதிவாதியாக சுமதி சரியாகக் குறிப்பிட்டுள்ளார் என்று நீதிபதி கூறினார்.

நீதிபதிகள் Faiza Jamaludin மற்றும் Nadzrin Wok Nordin ஆகியோரைக் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்றம், சுமதிக்கு 15,000 ரிங்கிட் செலவுத் தொகை வழங்கும்படியும் உத்தரவிட்டது.

கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதியன்று வாதியும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 16 பேரும் விடுமுறைக்காக புதுடில்லிக்கான விமானத்தில் ஏறுவதற்காக காலை 7.35 மணிக்கு KLIA முதலாவது முனையத்தில் இருந்தனர்.

சுமதியைத் தவிர, அக்குழுவில் இடம் பெற்றிருந்த அனைவரும் தானியங்கி குடிநுழைவு வாயிலை வெற்றிகரமாகப் கடந்தனர்.

அடையாளம் தெரியாத அதிகாரி ஒருவர் நடத்திய சோதனையில், சுமதி திவாலானவர் என்றும், நாட்டை விட்டு வெளியேறுவதில் இருந்து தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் தெரியவந்தது.

அதன் பின்னர் வேறொருவருக்கு பதிலாக சுமதி தவறாக அடையாளப்படுத்தப்படிருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னர், திவால்நிலைத் துறையால் இரண்டு நாட்களுக்குப் பிறகு பயணத்திற்கு அனுமதிக்கப்பட்டார்.

சுமதி அரசாங்கத்துக்கு எதிராக RM312,430 இழப்பீடு கோரி வழக்கு தொடுத்துள்ளார்.
வழக்கறிஞர் M.மனோகரன் மற்றும் M.ஹரிஹரன் சுமதி தரப்பிலும் Siti Syakimah அரசி தரப்பிலும் இவ்வழக்கில் வாதாடுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!