
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 26 – மலேசியாவில் பள்ளி குழந்தைகள் மத்தியில் ‘கிட்டப்பார்வை’ (Myopia) பிரச்சனை சாதாரணமான ஒன்றாக மாறக்கூடிய அபாய நிலையை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
15 வயதிற்குட்பட்ட மாணவர்களில் மூன்றில் ஒருவருக்கு ஏற்கனவே கிட்டப்பார்வை பிரச்னை உள்ளதாகவும், இது தொடக்கப் பள்ளியில் 7சதவீதமாக இருந்த நிலையில் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் போது 30 சதவீதமாக உயர்வுக்கண்டுள்ளதென்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நீண்ட நேர திரை பயன்பாடு, நகர்ப்புற வாழ்க்கை முறை, வெளிப்புற விளையாட்டு இல்லாமை ஆகியவை முக்கிய காரணிகள் இப்பிரச்சனைக்கு முக்கிய காரணமென்று யூகேஎம் (UKM) கண் மருத்துவ நிபுணர் பேராசிரியர் டாக்டர் கேத்தரின் பாஸ்டியன் கூறியுள்ளார்.
பெற்றோர்கள் கண் சிமிட்டுதல், தலைவலி, தொலைக்காட்சி அல்லது திரைக்கு அருகில் செல்லுதல் போன்ற அறிகுறிகளை கவனிக்காமல் விடுவதாகவும், பல குழந்தைகள் தாமதமாக கண்டறியப்படுவதாகவும் கண் நிபுணர் முகமட் அப்துல் லத்தீஃப் விளக்கியுள்ளார்.