
ஜகார்த்தா, செப்டம்பர் 1 – நாளை முதல் இந்தோனேசியாவில் அனைத்து சர்வதேச விமான பயணிகளும் “All Indonesia” என்ற செயலியின் மூலம் தங்களின் வருகையைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமென்று இந்தோனேசிய குடிநுழைவுத் துறை (Imigrasi) அறிவித்துள்ளது.
தற்போது, குறிப்பிட்ட விமான நிலையங்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டு வரும் இந்த செயல்முறை விரைவில் மற்ற சர்வதேச விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் விமான நிறுவனங்களிலும் தொடங்கப்படவுள்ளது.
பயணிகள் தங்களது வருகை அறிவிப்பை இலவசமாகவும் வருகைக்கு முந்தைய மூன்று நாட்களுக்குள் நிரப்ப முடியும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த வருகை செயல்முறை விரைவாகவும், பாதுகாப்பாகவும், மேலும் முதியோர், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எளிமையானதாகவும் அமையும் என்று இந்தோனேசிய குடிநுழைவுத் துறை இயக்குனர் குறிப்பிட்டார்.
இச்செயலியைப் பயணிகள் allindonesia.imigrasi.go.id இணையதளத்தில் அல்லது Google Play Store, App Store-இல் பதிவிறக்கம் செய்யலாம்.
இந்த செயலி வசதி அளிப்பதற்காக மட்டுமல்லாமல், இந்தோனேசிய நாட்டைப் பாதுகாத்து, அதன் எல்லை மேலாண்மையை உறுதிப்படுத்துகிறது.