
கோலாலம்பூர், செப்டம்பர்-5 – தேசிய முன்னணியின் கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்து நீண்ட பயணத்தில் உற்றத் தோழனாக இருந்து வரும் ம.இ.காவுக்கு, இன்று அக்கூட்டணியில் கிடைக்கும் மரியாதை வேதனையளிக்கிறது.
ஒற்றுமை அரசாங்கம் வாயிலாக புதியப் பங்காளிகள் கிடைத்ததும், தேசிய முன்னணித் தலைமை ம.இ.காவை ஏதோ வேண்டாத விருந்தாளி போல் நடத்தி வருகிறது.
இந்த அவமானங்களை ம.இ.கா இனியும் பொறுத்துக் கொள்ளாது என, அதன் தேசிய ஊடகப் பிரிவுத் தலைவர் எல். சிவ சுப்ரமணியம் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆக்கப்பூர்வமாக மக்கள் பணியாற்ற அமைச்சரவைப் பிரதிநிதித்துவம் வழங்காமல் தொடர்ந்து அலைக்கழித்தால், கூட்டணியை விட்டு வெளியேறுவது குறித்து ம.இ.கா பரிசீலிக்கும்.
இனியும் உரிய அங்கீகாரம் வழங்காவிட்டால்
அடிமட்ட தொண்டர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து இறுதி முடிவு தேசியப் பொதுப்பேரவையில் எடுக்கப்படும் என்றார் அவர்.
இது மிரட்டல் அல்ல, எங்களின் உரிமைக்கான எச்சரிக்கை என சிவ சுப்ரமணியம் கூறினார்.