
கோலாலம்பூர், செப்டம்பர்-5 – மெட்ரிகுலேஷன், STPM, Asasi, STAM மற்றும் டிப்ளோமா முடித்த மாணவர்களில் 78,883 பேருக்கு, வரும் புதியக் கல்வியாண்டில் அரசாங்க உயர் கல்விக் கூடங்களில் மேற்கல்வி தொடர வாய்ப்புக் கிடைத்துள்ளது.
அவர்களுக்கு 1,132 பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இளங்கலைப் பட்டப்படிப்புக்கு UPUOnline வாயிலாக மொத்தமாக 109,866 விண்ணப்பங்கள் கிடைத்தன; அவற்றில் தகுதி அடிப்படையில் விண்ணப்பங்கள் வரிசைப்படுத்தப்பட்டு இந்த 78,000 பேரும் தேர்வுச் செய்யப்பட்டதாக உயர் கல்வி அமைச்சு கூறியது.
இடம் கிடைக்காத மாணவர்கள் அதே UPUOnline வாயிலாக மேல்முறையீடு செய்யலாம்.
இன்று நண்பகல் 12 மணி முதல் செப்டம்பர் 14-ஆம் தேதி மாலை 5 மணி வரை மேல்முறையீடு செய்ய அவர்களுக்கு வாய்ப்புண்டு.