
செகாமாட், செப்டம்பர்-8 – ஜோகூர், செகாமாட்டில் அண்மையில் ஏற்பட்ட வலுவற்ற நில நடுக்கங்களில் 15 அரசு அலுவலக கட்டடங்கள் சிறிய அளவிலான சேதங்களைச் சந்தித்துள்ளன.
அவற்றை பழுதுபார்க்க 550,550 ரிங்கிட் செலவாகுமென கணிக்கப்படுவதாக, பொதுப் பணித் துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.
இவ்வேளையில், தனியார் குடியிருப்புகளில் சிறிய பழுது ஏற்பட்டதாகக் கூறி 62 புகார்களும், பள்ளிவாசல்கள் சிறிய சேதம் ஏற்பட்டதாக 2 புகார்களும் பெற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், நில அதிர்வு அபாயமுள்ள வரைபடத்தில் செகாமாட்டையும், பக்கத்து மாவட்டமான பத்து பஹாட்டையும் சேர்த்துக் கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டதாக மஸ்லான் சொன்னார்.
இதற்கு முன் ஆகஸ்ட் 24 முதல் செகாமாட்டில் தொடர்ச்சியாக 6 முதல் 7 வலுவற்ற நில நடுக்கங்கள் பதிவாகியது குறிப்பிடத்தக்கது.