
ஸ்வீடன், செப்டம்பர் 10 – ஸ்வீடனின் புதிய சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்ட எலிசபத் லான், நேற்று நடைபெற்ற நேரடி பத்திரிகையாளர் சந்திப்பில் திடீரென மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சரவையில் புதிய உறுப்பினராக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, லான் திடீரென மேடையில் நிற்கும் நிலையிலிருந்து மயங்கி விழுவதை வலைத்தளத்தில் பரவி வரும் காணொளியில் தெளிவாக காண முடிகின்றது.
லான் திடீரென மயங்கி விழுந்த பின்பு நாட்டின் துணைப் பிரதமர் விரைந்து வந்து அவருக்கு உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின் அங்கிருந்த அரசியல்வாதிகள் மற்றும் செய்தியாளர்கள் உடனடியாக உதவி செய்து, லானின் உடல்நிலை சரியாகும் வரை அவரைச் சூழ்ந்து கவனித்தனர்.