
காப்பார், செப்டம்பர்-12 – காப்பார், Kampung Perepat Kapar, Jalan Kempas Kiri சாலையோரத்தில், உடலில் பல்வேறு காயங்களுடன் ஓர் ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை 3.30 மணிக்கு அது குறித்து தகவல் கிடைத்ததாக, வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் எஸ். விஜயராவ் தெரிவித்தார்.
உள்ளூரைச் சேர்ந்த 33 வயது அந்நபர் கொலைச் செய்யப்பட்டிருக்கலாம் என்பது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து கொலை விசாரணைத் திறக்கப்பட்டுள்ளதாக விஜயராவ் சொன்னார்.
நேற்று முன்தினம் இரவு முதல் சம்பவ இடத்தில் காருக்கு வெளியே ஓர் ஆடவர் பேச்சு மூச்சின்றி, இரத்த வெள்ளத்தில் கிடப்பதாக முன்னதாக ஃபேஸ்புக்கில் செய்தி வைரலானது.